search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "இலவச சைக்கிள்கள்"

    • பெரியகுளத்தில் பள்ளி மாணவர்களுக்கு இலவச சைக்கிள்கள் வழங்கப்பட்டது.
    • இதில் நகர்மன்ற உறுப்பினர்கள், ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

    பெரியகுளம்:

    தேனிமாவட்டம் பெரியகுளத்தில் உள்ள விக்டோரியா நினைவு அரசினர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் 2021 -2022 ஆம் கல்வியாண்டில் பயிலும் மாணவர்கள் 270 நபர்களுக்கு தமிழக அரசின் இலவச சைக்கிள்கள் வழங்கப்பட்டது.

    தேனி வடக்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் தங்க தமிழ்ச்செல்வன் வழிகாட்டுதலின்படி, பெரியகுளம் எம்.எல்.ஏ. சரவணகுமார் அறிவுறுத்தலின்படி நகர்மன்ற தலைவர் சுமிதா சிவக்குமார் பள்ளி மாணவர்களுக்கு இலவச சைக்கிள்களை வழங்கினார்.

    இதில் பெரியகுளம் தி.மு.க. நகர செயலாளர் முகமது இலியாஸ், தலைமை ஆசிரியர் கோபிநாத் மற்றும் நகர்மன்ற உறுப்பினர்கள், ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

    • ரூ.6 கோடி மதிப்பிலான சைக்கிள்கள் வழங்கும் தொடக்க நிகழ்வு மாவட்ட கலெக்டர் தலைமையில் நடைபெற்றது.
    • மாணவ, மாணவிகள் தமிழக அரசால் செயல்படுத்தப்பட்டு வரும் கல்வி சார்ந்த திட்டங்களை கொண்டு, தங்களது வாழ்வினை மேம்படுத்திக் கொள்ள வேண்டும் என கலெக்டர் தெரிவித்தார்.

    தேனி:

    தேனி-அல்லிநகரம் நகராட்சிக்குட்பட்ட அரசு மேல்நிலைப்பள்ளியில் தமிழக அரசின் சார்பில் 11,807 மாணவ, மாணவிகளுக்கு ரூ.6 கோடி மதிப்பிலான சைக்கிள்கள் வழங்கும் தொடக்க நிகழ்வு மாவட்ட கலெக்டர் முரளிதரன் தலைமையில், சரவணக்குமார் எம்.எல்.ஏ முன்னிலையில் நடைபெற்றது.

    நிகழ்ச்சியில் கலெக்டர் பேசியதாவது,

    கல்வி என்பது பெருமைக்காக தேடிக் கொள்வது அல்ல பெற்றதைக் கொண்டு பெருமை தேடிக் கொள்ள வேண்டும் என்ற சிந்தனைக் கருத்துருக்கேற்றாற் போல நாளைய சமுதாயம் வெறும் ஏட்டுக் கல்வியாக மட்டும் அல்லாமல் பல்திறன் வளர்க்கும் கல்வியாக மேம்படுத்த வேண்டும் என்ற நோக்கத்துடனும்,

    ஒவ்வொரு மாணவனும் கற்கும் பொழுது தங்களுக்குள் உள்ள ஒரு தனித்திறமை என்ன என்பதை அறிந்து தன்னை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்பதனை கருத்தில் கொண்டு, 12-ஆம் வகுப்பு முடித்த மாணவ, மாணவர்களுக்கு உயர்கல்வி வாய்ப்பு பற்றி முழுத்தகவல் வழங்கிடும் பொருட்டு உருவாக்கப்பட்ட முதல்வரின் கனவுத்திட்டமான "நான் முதல்வன்" திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.


    கல்வி மனித அடிப்படை உரிமைகளில் ஒன்று. அறிவியற் கல்வி, சமூக அறிவியற் கல்வி, அழகியல் கல்வி ஆகிய மூன்றும் வாழ்க்கைக்கு அவசியமானவை. ஒருவனுக்கு பெருமையையும் புகழையும் தரக்கூடிய செல்வம் கல்விச் செல்வமே அன்றி வேறு ஏதுமில்லை. வாழ்க்கையின் நோக்கம் என்ன என்பதை இனங்கண்டு அதற்கேற்ப கல்வி கற்க வேண்டும். வாழ்க்கையை நெறிப் படுத்தவும் மேம் படுத்தவும் கல்வியை பயன்படுத்திட வேண்டும்.

    எனவே, மாணவ, மாணவிகள் தமிழக அரசால் செயல்படுத்தப்பட்டு வரும் கல்வி சார்ந்த திட்டங்களை கொண்டு, தங்களது வாழ்வினை மேம்படுத்திக் கொள்ள வேண்டும் என தெரிவித்தார்.

    தேனி மாவட்டத்திலுள்ள கம்பம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட 24 அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகள் மற்றும் பகுதியாக அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் 11-ம் வகுப்பு பயின்று, தற்போது 12-ம் வகுப்பு பயின்று வரும் 3,251 மாணவ, மாணவிகளுக்கு ரூ.1.65 கோடி மதிப்பிலான மிதிவண்டிகளும்,

    ஆண்டிபட்டி தொகுதிக்குட்பட்ட 35 பள்ளிகளைச் சார்ந்த 2,933 மாணவ, மாணவிகளுக்கு ரூ.1.49 கோடி மதிப்பிலான மிதிவண்டிகளும், பெரியகுளம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட 21 பள்ளிகளைச் சார்ந்த 3,331 மாணவ, மாணவியர்களுக்கு ரூ.1.70 கோடி மதிப்பிலான மிதிவண்டிகளும்,

    போடிநாயக்கனூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட 17 பள்ளிகளைச் சார்ந்த 2,292 மாணவ, மாணவிகளுக்கு ரூ.1.16 கோடி மதிப்பிலான மிதிவண்டிகளும் என மொத்தம் 97 பள்ளிகளில் சார்ந்த 11,807 மாணவ, மாணவியர்களுக்கு ரூ.6.00 கோடி மதிப்பிலான சைக்கிள்கள் வழங்கப்படவுள்ளது.

    ×